குப்பை தொட்டி தத்துவம் உங்கள் வாழ்வை மாற்றும்

குப்பைத்தொட்டி வாழ்க்கை வாழ்கிறீர்களா

நாம் தெரிந்தும் தெரியாமலும் ஏதோ சாப்பிடறோம் அப்படின்னு கண்டதை எல்லாம் வாயில ஓட்டி அமர்த்தி அமர்த்தி சாப்பிட ஆரம்பிக்கிறோம் அதுவும் இப்போதெல்லாம் இரவு ஒன்பதுக்கு பிறகு தான் எல்லா விதமான உணவு கொண்டாட்டங்களும் அனைவரும் செய்கின்றோம் இரவு நேர உணவு உண்பது என்பது சாத்தானின் உணவை உண்பதற்கு சமம் ஆம் சாத்தான் என்பது நம் உடம்பில் பல்வேறு விதமான பிரச்சனைகளை நிச்சயமாகவே ஏற்படுத்தும் அன்னம் போல் எண்ணம் என்றார்கள் நமது முன்னோர்கள் அன்னத்திற்கான லட்சுமியாக அன்ன பூமியையும் அன்னலட்சுமி சொன்னார்கள் ஆனால் இப்போது என்கின்ற உணவானது எல்லா விதமான எதிர்மறை ஆற்றல்களையும் நம் முன் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகளை நாமே ஏற்படுத்திகின்றோம்

உள்ளம் பெருங்கோவில் உன் உடம்பே ஆலயம் வள்ளல் பெருமானருக்கு வாய் கோபுர வாசல்

என்று நமது முன்னோர்கள் சொல்கிறார்கள் ஆனால் இதை நாம் புரிந்து கொள்ளாமல் தவறான உணவு பழக்க வழக்க முறைகளிலும் தவறான உணவகத்தில் உண்பதன் மூலமாகவும் தவறான வாழ்வியலையும் உணர்வுகளையும் உருவாக்குகிறோம்

உங்கள் வயிறு குப்பை தொட்டியாக மாறினாள்

உங்கள் மனம் குப்பை தொட்டியாக மாறும் மனம் குப்பை தொட்டியாக மாறினால் அனைத்தும் உங்கள் வாழ்வில் அவ்வாறே ஆகும்

Digestive-health

குறள் 941:*
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர், வளிமுதலா எண்ணிய மூன்று.
உரை
பசியின் அளவுக்கு மிகுதியாக உண்பதும், உடலுக்குத் தேவையான பொழுது ஓய்வும் உறக்கமும் கொடுக்காமல் இருப்பதும். சித்தமருத்துவ நூல்கள் கூறும் வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.

உங்கள் வயிறை குப்பைத் தொட்டி ஆக்குவதை நிறுத்துங்கள் எவ்வாறு நிறுத்தலாம்
பசிக்கு உணவு அருந்துங்கள்
உயிருள்ள உயிரோட்டம் உள்ள உணவுகளை உண்ணுங்கள் ரசித்து ருசித்து புசித்து உண்ணுங்கள்
எப்போது உணவை எடுத்துக் கொண்டாலும் அரை வயிறு உணவை உண்ணுங்கள்

இதன் மூலமாக நீங்கள் உங்கள் வயிற்றை ஆரோக்கியமான இடமாக மாற்றுவீர்கள் வயிறு ஆரோக்கியமடைந்தால் உங்கள் மனம் ஆரோக்கியம் அடையும் மனம் ஆரோக்கியமாக அடைந்தால் உங்கள் எண்ணங்கள் ஆரோக்கியமடையும் எண்ணங்கள் ஆரோக்கியமாக இருந்தால் செயல் ஆரோக்கியமாக இருக்கும் செயல் ஆரோக்கியமாக இருந்தால் எல்லா செயலிலும் நீங்கள் வெல்வீர்கள் புரிந்து செயல்படுங்கள் வாழ்க

குறள் 944:*
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல, துய்க்க துவரப் பசித்து.

உரை
உண்ட உணவு செரித்ததை அறிந்து, ஆசைக்கும் சுவைக்கும் அடிமையாகி அதிகமாக உண்ணாமல். நன்றாகப் பசிக்கும்போது உடலுக்கு ஒத்துப்போகும் உணவை உட்கொள்வதை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

புரிந்து செயல்படுங்கள் உங்கள் வாழ்வில் அனைத்து மாற்றமும் முன்னேற்றமும் உங்கள் உணவில் உள்ளது.

ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி
ஸ்ரீ குபேர பீடம்

இறை + அவன் = இறைவன்

இறையில் கவனம் வைத்து
அவன் என்கின்ற சிவனை உன் ஜீவனை
நீ கவனித்தால் உன் வாழ்வில் நீ இறைவனாக மாறுவாய் இறை என்ற உணவை
சத்து மிகுந்ததாகவும் உயிர் ஆற்றல் மிகுந்ததாகவும் இருக்கும் பொழுது அந்த இறை உனக்குத் தேவையான இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய பிராண விருத்தி ஆற்றலை உண்ணும் ஈர்த்து தரும் அதை ஈர்க்கும் பொழுது இயற்கையும் இறையை உண்ணும் நீயும் ஒன்றே என்று நீ உணர்வாய் அவ்வாறு நீ உணரும் பொழுது நீயே இறைவனாய் மாறுவாய் இறையில் கவனம் வைக்காதவனுக்கு இறைவன் மீதும் கவனம் இருக்காது இறைவன் என்கின்ற உன் மீது நீ கவனம் வைக்கும் பொழுதே இந்த பிரபஞ்சத்தில் உன் எண்ணங்களால் உன் மனதால் உன் எண்ணச் செயல்களால் நீ நினைக்கும் அத்தனை விதமான காரியங்களும் கைகூடும். இறை என்ற சக்தியின் மீது நீ கவனம் வைக்காத பொழுது இயற்கையின் மீது நீ கவனம் வைக்காது பொழுது பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் மூலமாகவும் கிரகங்கள் மூலமாகவும் உன் வாழ்வில் உனக்கு தெரியாமல் பல்வேறு விதமான கேடு பலன்கள் ஏற்படும் இறைவன் மீது நீ கவனம் வைக்கும் பொழுது முற்பிறவியில் செய்த பாவங்களும் உன்னை ஒன்றும் செய்யாது முப்பிறவில் செய்த புண்ணிய பலன்களும் இப்பிறவியில் செய்த அருள் புண்ணிய வளங்களும் ஒன்று சேர்ந்து இவ் வாழ்க்கையில் எல்லாவிதமான அருளையும் பொருளையும் அன்பையும் ஆனந்தத்தையும் ஆன்மீக அதிர்வலைகளையும் முழுமையாக பெற்று நிம்மதியுடன் நீ வாழ்வாய் அவ்வாறு நீ வாழ நீ செய்ய வேண்டியது இறையில் கவனம் வை இறைவன் மீது கவனம் வை அதற்கு சித்தர்களின் பாதையில் உன் செயல்பாடுகளை செயல்படுத்து

இறையன்ற உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்கின்ற திருமூலர் ரகசியத்தையும் சிவன் என்ற ரகசியத்தை உணர்ந்து போல திருமூலர் சொன்ன மந்திரங்களையும் சித்தர்களின் பாதையில் நீ செயல்படுத்த ஆரம்பித்தால் நீ இந்த பிரபஞ்சத்தில் எதைத் தேடிக் கொண்டிருக்கின்றாயோ அதை உன்னைத்தேடி வர வைக்க முடியும் அவ்வாறு வரும் பொழுது இந்த பிரபஞ்சமே உனக்கு குருவாய் இருந்து சித்தனாய் இருந்து எல்லாவிதமான சிக்கல்களையும் தீர்த்து உன் வாழ்க்கையை சீரும் சிறப்புமாக சகல செழிப்பாக அமைத்துத் தரும்

இப்பேற்பட்ட சிறந்த பாதையை நீ பயணிக்க விரும்பினால் ஸ்ரீ குபேர பீடத்திற்கு வாருங்கள் ஸ்ரீ குபேர குருஜி சொல்லித் தரும் பயிற்சிகளில் கற்றுக்கொண்டு உங்கள் வாழ்வை உயர் ஆற்றல்மிக்க அருள் பலமிக்க வாழ்வாய் மாற்றிக் கொள்ளலாம்