Skip to content

Original Karungali Products Explanation in Tamil

original karungali products tamil

கருங்காலி

கருங்காலி என்பது ஒரு உறுதியான பலகை வகை மரம் ஆகும். இந்த மரங்களின் மையத்தில் காணப்படும் கருமை நிற அச்சுதான் கருங்காலி பொருட்கள் செய்ய பயன்படுகின்றது. அந்த மைய அச்சில்தான் மரத்தின் ஒட்டுமொத்த சத்துக்களும் சேமிக்கப்படும். அந்த அச்சில் இருந்து நாம் பொருட்கள் தயாரிப்பதன் மூலம் நமக்கு திடமான பொருட்கள் கிடைக்கின்றன. இந்த மைய அச்சு கருமை நிறத்தில் இருப்பதால் இதன் மூலம் கிடைக்கும் அனைத்து பொருட்களுமே கருமை நிறமாக அமைகின்றன.

original karungali Infographics

கருங்காலியின் பூர்வீகம் (native of karungali)

இந்த வகை மரங்கள் பெரிதும் தென்னிந்தியா, இலங்கை, வடக்கு ஆப்பிரிக்கா, திமோர் போன்ற நாடுகளிலும் இதன் சிற்றின வகைகள் பல இடங்களிலும் காணப்படுகின்றன.

கருங்காலியின் பொருட்கள் (products of karungali)

கருங்காலி கட்டையின் மூலம் தெய்வ விக்கிரகங்கள், பலகை, அலங்காரப் பொருட்கள், கருங்காலி வளையல்(bracelet), கருங்காலி மாலை போன்ற பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

கருங்காலி பொருட்கள் தயாரிக்கும் முறை (methods to produce karungali products)

நன்கு வளர்ச்சியடைந்த கருங்காலி மரங்களின் அச்சு மட்டுமே கருங்காலி பொருட்கள் தயாரிக்க உதவும். இளம் கட்டைகள் உகந்ததாக அமையாது. எனவே முதிர்ந்த கருங்காலியின் மைய அச்சினை உகந்த வடிவத்திற்கு செதுக்கி அதனை மெருகூட்டி பயன்படுத்துவதன் மூலம் இந்த பொருட்கள் பூச்சி வகைகளால் பாதிக்கப்படாமல் உள்ளன. மெருகூட்டுவதன் மூலம் இதன் தன்மை மேலோங்கி பலரால் கவரப்படுகின்றது.

கருங்காலி யின் மருத்துவ பயன்கள்(medicinal uses of karungali)

original karungali products tamil

கருங்காலி மரங்கள் மற்றும் அதன் பாகங்கள் சரும நோய்கள், பருக்கள், நரம்பியல் நோய்கள், மன அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்துவதோடு எலும்புகளுக்கு பலம் தருவதாக அமைகின்றன.

கருங்காலி அணிவதன் பயன்கள் (benefits of using karungali)

கருங்காலி பொருட்களை நாம் அணிவதன் மூலம் சரும நோய்கள் நீங்கும். இந்த கருங்காலி நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை உடையது. இதனை நாம் அணிவதன் மூலம் நேர்மறை ஆற்றல் நம்மை அறியாமல் நமக்குள் கடத்தப்படுகின்றன. மேலும் திருஷ்டி, பொறாமை, ஏவல், காத்து கருப்பு போன்ற எதிர்மறை ஆற்றல் நம்மை நெருங்காமலும் தடுக்கின்றது.

கருங்காலி எப்படி அணிய வேண்டும் (how to wear karungali)

பொதுவாகவே கருங்காலி நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் திறன் கொண்டதால் கருங்காலியால் ஆன அணிகலன்களை வழிமுறையின்றி சாதாரணமாகவே அணியலாம். எனினும் இதன் தன்மையை அதிகரிக்க கருங்காலி அணிகலன்களை பூஜை அறையில் வைத்து பூஜித்தோ, கோவில்களில் வைத்து பூஜை செய்தோ, யாக வேள்விகளில் வைத்து வழிபாடு செய்தோ அணிவது மிகச் சிறப்பு.

கருங்காலியை யாரெல்லாம் அணியலாம் (who are all can wear karungali)

கருங்காலிக்கு தோஷமோ கட்டுப்பாடோ கிடையாததால் குழந்தைகள், சிறியவர், பெரியவர், பெண்கள் என அனைவரும் அணியலாம். பூப்படைந்த கன்னிப் பெண்கள், மாதவிடாய் பெண்கள், மாமிசம் உண்பவர்கள் கூட கருங்காலி பொருட்களை அணியலாம்.

தரமான கருங்காலி கண்டறியும் முறை (method to identify the good quality of karungali)

கருங்காலி மாலை அல்லது வளையல் அல்லது பொருளை தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கும் பொழுது கருங்காலியின் கருமை நிறம் நீரில் கலந்து கருமை நிற நீராக மாறும். இதுவே தரமான கருங்காலியை கண்டறியும் எளிய முறை. இந்த நீரை பருகுவதன் மூலம் சரும நோய்கள் நீங்குவதோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களும் வெளியேறுகின்றன.

To buy our products: 7868868899

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *